show video detail

மதுரையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம்!
- Published_at:2013-04-30
- Category:Entertainment
- Channel:Yogesh karthick
- tags:
- description: சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் மதுரை மாநகரம்! மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 25 கி.மி தொலைவில் உள்ளது பெருமாள் மலை. இங்குள்ள நரசிங்கம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பண்டைய கால ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர்களை முறையாக அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட இந்த ஈமக்காடு சுமார் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததெனவும், பண்டைய மக்கள், முதுமக்கள் தாழியைப் பயண்படுத்தியதற்கும் முந்தைய நாகரீகம் இதுவெனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஈமக்காட்டை தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் தமிழர்களின் நாகரீகம் பற்றிய பல்வேறு அரிய செய்திகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் இவர்கள். மேலும் மத்திய அரசு இதை முறையாக எடுத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென வேண்டுகோளும் விடுத்துள்ளனர். தமிழகத்தில் இது போன்ற ஈமக்காடுகள் அரிக்கமேடு, ஆதிச்சனல்லூர், அழகன்குளம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தகது. மேலும் உலகிலேயே இது போன்ற ஈமக்காடுகள் அதிகமாக இருப்பது தமிழகத்தில் தான் என்கின்றனர் வல்லுனர்கள்! செய்தி: புதிய தலைமுறை தமிழர் நாகரீகம் குறித்த ஆய்வுகள் மற்றும் தேடலை மேலும் தெரிந்து கொள்ள் இணையுங்கள் http://www.facebook.com/vidhaifoundation http://www.facebook.com/vidhaifoundation
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2013-05-11 | 1,800 | 9 | 2 |
(![]() |