show video detail

பிறமொழி கலவாது உரையாடவேண்டியது ஏன்!
- Published_at:2011-12-28
- Category:Education
- Channel:Tamil Tamils
- tags:
- description: தமிழில் பிறமொழி கலவாது உரையாடவேண்டியது ஏன்!! ஒரு சிறுவனின் பேச்சு! ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லி தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா? தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இதிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனினதும் கடமையாகும். நன்றி
ranked in date | views | likes | Comments | ranked in country (#position) |
---|---|---|---|---|
2013-05-19 | 60,951 | 211 | 35 |
(![]() |