show video detail
இன்று நடைபெறும் சூடாமணி சந்திரகிரகணம் எந்த நட்சத்திரகாரர்களை   பாதிக்கும் !
482K 2.3K 76 06:01
இன்று நடைபெறும் சூடாமணி சந்திரகிரகணம் எந்த நட்சத்திரகாரர்களை பாதிக்கும் !
  • Published_at:2017-08-06
  • Category:People & Blogs
  • Channel:Tamil kovil
  • tags: சகாதேவன் சாஸ்திரம் திருவோணம் சந்திர கிரகணம் கிரகணம் மந்திரம் ஜெபம் கிரகண காலத்தில் செய்யும் அனைத்தும் பலன் பித்ரு விநாயகர் அருகம்புல் மூன் று சந்திரன் வீடியோ வீடியோஸ் tamilkovil.in
  • description: சகாதேவன் சாஸ்திரப்படி வரும் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வர உள்ள சந்திரகிரகணம் மற்ற சந்திரகிரகணங்களை எல்லாம் விட சிறப்பு வாயந்தது. இந்த சந்திர கிரகணம் திருவோணம் நட்சத்திரத்தில் வருவதால் இதற்கு சூடாமணி சந்திர கிரகணம் என்றும் பெயர், சகாதேவன் சாஸ்திரப்படி வரும் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி மாலை 4.20 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு 12.50 வரை இருக்கிறது. இதில் இரவு 10.20 மணிக்கு மேல் நள்ளிரவு 12.50 வரை அதி தீவிரமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் என்னவெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உங்களுடன் பதிவு செய்கிறோம். ராகு கேது பெயர்ச்சி முடிந்த 18 நாட்களுக்குள் வரும் சந்திரகிரகணம் பல மாற்றங்களை பூமியில் ஏற்படுத்தும். சமீபத்தில் 27-7-2017 அன்று தான் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றது. 18 நாட்களுக்கு வருவதால் இந்த சந்திரகிரகணம் அரசியல் ரீதியாகவும் நீர் நிலைகள் தொடர்பாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. வலிப்பு நோய் உள்ளவர்கள், மனநிலை பாதிப்பில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தில் மேலும் கூட வாய்ப்பு இருக்கிறது இதை தவிர்க்கும் முறைகளையும் பின் தெரியப்படுத்துகிறோம். இதே போல் ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்,அவிட்டம், இந்த நட்சத்திர காரர்களும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக கிரகண நேரத்தில் வெளியே செல்வது நல்லது கிடையாது என்பதால் அக்காலத்தில் இந்த கிரகண நேரத்தில் ஆலயங்களை பூட்டி அந்த வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சொல்வதும் உண்டு. இது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வராமல் இருப்பதும், மேலே குறிப்பிட்ட நடத்திரக்காரர்களும் வெளியே செல்வதை தவிர்ப்பதும் நன்று, அடுத்து கர்ப்பினி பெண்கள் எக்காரணம் கொண்டும் கிரகண நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. அது வயிற்றில் இருக்கும் சிசுவை அதிகமாக பாதிக்கும். கணவன் மனைவியும் இந்த காலக்கட்டங்களில் உடல் சேர்க்கை கூடாது இருத்தால் நலம். கிரகணம் முடிந்து வரக்கூடிய காலக்கட்டங்களில் 1 மாதம் வரை இதன் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த நேரங்களில் கருவும் தாய்மார்களின் உடல் நிலை பாதிப்பதோடு பிறக்கும் குழந்தைகள் வலிப்பு, மூளைவளர்ச்சி குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு உண்டு என்பதால் 1 மாதம் கழித்து கணவன் மனைவி உடல் ரீதியாக சேர்வது நலம். பொதுவாக சந்திர கிரகணம் முடிந்த பின்பு காலையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் சிராப்தம் செய்வது மிக மிக நல்லது. கிரகணம் ஏற்பட்ட காலத்தில் பித்ருக்களுக்கு உணவு கிடைக்காது அதனால் அடுத்த நாள் அதிகாலை தர்ப்பணம் செய்வது பித்ருக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இந்த சந்திரக கிரகணத்தில் சொல்லப்படும் மந்திரங்களும் நல்ல பலனைக்கொடுக்கும். சந்திர கிரகணத்தின் தாக்கத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்ளும் வழிமுறை ! 1. கிரகணம் துவங்கும் முன்பே அருகம்புல்லை வாங்கி நம் தலையின் மீதும் உணவுப்பண்டங்கள் மீதும், உணவு சேகரித்து வைத்திருக்கும் பெட்டிகளின் மேல் வைப்பது நலம். 2. கிரகண காலத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே எளிதில் ஜுரணமாகக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டும். கிரகண காலத்தில் எக்காரணம் கொண்டும் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். ( நோயாளிகளையும் குழந்தைகளையும் தவிர ) 3. குறைந்த இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு இரத்தக்கொதிப்பு மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது அதனால் அவர்கள் இரத்தக்கொதிப்பை சமப்படுத்துவதற்கான வழிமுறையை முன்கூட்டிய தெரிந்து வைத்திருக்க வேண்டும். 4. வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு கிரகணத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதுடன் இவர்களின் உடம்பில் அருகம்புல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது கிரகணத்தின் தாக்கத்தை குறைக்கும். கூடுமானவரை இந்த நேரத்தில் கொடுக்கும் மருந்து கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு அதனால் தேவைப்பட்டால் மட்டும் மருந்து கொடுக்கவும். 5. கிரகண காலத்தில் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு,இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதும், மந்திரங்கள் சொல்வதும் சிறப்பான பலனைத் தரும். 6. ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்,அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரனைப்பார்க்க கூடாது. வெளியே செல்லவும் கூடாது. 7.சந்திர கிரகணம் முடிந்த பின் குளிப்பது நலம் அது நள்ளிரவாக இருந்தால் தண்ணீரை தலையில் மூன்று முறை தெளித்து, முகம், கை,கால் கழுவுவதும் நலம். 8. சந்திர கிரகண காலத்தில் விநாயகரின் அருகம்புல்லை வைத்திருப்பதால் ராகு கேதுவின் எந்த கெடுபலனும் நம்மை தாக்காமல் இறைவன் காத்தருள்வார். இதே போல் மேலும் அரிதான வீடியோக்களைப் பார்க்க இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/tamilkovil?sub_confirmation=1 இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like செய்தும் Subscribe செய்தும் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தகவல் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்களுக்கு புண்ணியமும் கிடைக்கும். நன்றி.
ranked in date views likes Comments ranked in country (#position)
2017-08-08 482,068 2,261 76 (India,#24)